கடந்த வாரம் விகடனில் திரு.கவின்மலர் அவர்கள் எழுதிய கட்டுரையை படித்தேன் . அதை படித்தவுடன் மனதிற்குள் சில கேள்விகள் எழாமல் இல்லை இடிந்தகரையில் திரு உதயகுமார் அவர்கள் தலைமையில் அணுவுலைக்கு எதிராக அங்கு போராடும் மக்களையும் அவர்களின் உணர்வுகளையும் மதிக்கிறேன். அதே நேரத்தில் அங்குள்ள சிறுவர்கள் சளைகாமல் தொடர்ந்து போராடுகிறார்களே அவர்களின் கல்வி என்ன ஆனது என்பது குறித்து அறிய விரும்புகிறேன்... போராட்டகளங்களை ஒதுக்கிவைத்து விட்டு பார்கவும்.. நாம் வீட்டில் இது போன்று நம் பிள்ளைகள் இப்படி இருந்தால் அவர்களை நாம் இப்படியே விட்டுவிடுவோமா ? நாளைக்கே அந்த போராட்டங்கள் முடிவுக்கு வந்தால் பின்னர் நாம் நம் வேலையை பார்க்க போய் விடுவோம் பின்னர் அந்த சிறுவர்களின் நிலையை நாம் யாரும் அறிய வாய்ப்பு இல்லை...கிஷன் போன்ற சிறுவர்களுக்கு கல்வி ஒன்று தான் உயர்வை தரும்....
No comments:
Post a Comment