சிறு வயதிலேயே தினசரி செய்தித்தாள்கள்
படிக்கும் பழக்கம் உண்டு. அப்போது என் தந்தை துணிக்கடை வைத்திருந்தார். அன்று எங்கள் ஊரிலேயே மிகவும் பிரபலமான துணிக்கடை அது. நான் சிறுவனாக இருக்கும் பொது கடைக்கு செல்வேன். கடையில் தினத்தந்தி பத்திரிகை
இருக்கும். என் தாத்தா தான் படிக்க சொல்லிதருவர். அப்படிதான் தமிழ் வாசிப்பு பழக்கம் எனக்கு ஏற்பட்டது .
பின்னர் நான் பட்டுகோட்டையில் உள்ள பள்ளில் சேர்த்தேன். தினமும் பள்ளிக்கு பேருந்தில் சென்று வருவேன். பட்டுகோட்டை மணிகுண்டில் ஒரு சிறிய புத்தக கடை உள்ளது
அங்கு மாயாவி புத்தகம் விற்பார்கள். அடிக்கடி வாங்கி படிப்பேன். பின்னர் அந்த பழக்கம் அப்படியே போய்விட்டது என்றாலும் தினசரி செய்திதாள்களை படிக்கும் பழக்கம் மட்டும் தொடர்ந்தது. அதுவே தமிழ் மீது எனக்கு அதிக ஈடுபாட்டை ஏற்படுத்தியது.
பின்பு பள்ளி இறுதி முடித்து தஞ்சையில் உள்ள பாரத் கல்லூரியில் சேர்ந்தேன். அங்குதான் விகடன் எனக்கு அறிமுகம் ஆனான். அப்போது விகடன் வெள்ளிகிழமையில் வெளிவரும். காலையிலே நண்பனில் சைக்கிளை எடுத்துகொண்டு புதிய பேருந்து நிலையம் சென்று விடுவேன். அருகில் உள்ள கடையில் விகடன் கிடைக்கும் என்றாலும் சற்று தாமதமாகவே கிடைக்கும் ஆகவே புதிய பேருந்து நிலையம் சென்று வாங்குவேன். நான் கல்லூரி படித்த அந்த மூன்று ஆண்டுகள் விகடன் தான் எனக்கு உயிர் நண்பன்.

அப்போது விகடனில் வெளிவந்த அரசியல்
அப்பாவிகள் தொடர் முலம் அய்யா தமிழருவி மணியன் அவர்கள் பற்றியும் அய்யா தோழர் நல்லகண்ணு அவர்கள் பற்றியும் அறிந்துகொண்டேன். கல்லூரி காலத்தில் தான் சில புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.
பின்னர் கல்லுரி முடித்து திருப்பூர்க்கு வேலை தேடி வந்தேன். இங்கும் எனக்கும் விகடனுக்கும் புத்தகங்களுக்கும் ஆனா தொடர்பு தொடர்கிறது.இங்கு 6 ஆண்டுகளாக வேலை செய்கிறேன். முன்பு நண்பர்கள் உடன் விடுதியில் தங்கி இருந்தேன். கடந்த ஒரு ஆண்டாக தனியாக அறை எடுத்து தங்கி உள்ளேன். “நான்கு ஐந்து நண்பர்களோடு இருக்கும் பொது உன் மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றுவது பெரிய விஷயம் இல்லை ஆனால் நீ தனிமையில் இருக்கும் போது நல்ல எண்ணங்கள் தோன்றவேண்டும் அதுதான் பெரிய விஷயம்” என்று எங்கோ படித்த நினைவு. ஆனால் இவை எதற்கும் பதில் வைக்காமல் என்னுடைய புத்தகங்கள் பார்த்து கொள்கின்றன. இதோ இப்பொழுது வலைபூவில் எழுதிகிறேன். இதற்கும் என்னுடைய புத்தகங்கள் துணை புரியும் என்று நம்புகிறேன்.

No comments:
Post a Comment