நேற்று மதியம் ஒரு மெஸ்யில் சாப்பிட்டு
கொண்டுருந்தேன். நான்கு சுமை தூக்கும் தொழிலாளர்கள் வந்து சாப்பிட அமர்ந்தனர்.
அவர்கள் தங்களுக்கு தலா மூன்று புரோட்டா ஆர்டர் செய்தனர். நான் அவர்களிடம்
கேட்டேன் ஏன் மதியம் சாப்பாடு சாப்பிடாமல் புரோட்டா சாப்பிட்டு உடம்பை கெடுத்து
கொள்ளுறிர்கள் என்று கேட்டேன் அதற்கு அவர்களில் ஒருவர் தம்பி இன்று சாப்பாடு
விற்கிற விலைக்கு (இங்கே ரூபாய் 40 ) அது எல்லாம் கட்டுபடி ஆகாதுபா. மூன்று
புரோட்டா 20 ரூபாய் சாப்பிடால் இரவுவரை பசி இருகாது என்று கூறினார்கள்.
இன்று உழைப்பவனின் நிலை இதுதான்...
No comments:
Post a Comment