Saturday, 20 October 2012

மொபைலும்... பெண்களும்....


மண்ணை பார்த்து கொண்டு நடக்கும்
பெண்களை விட ......
என்னை பார்த்து கொண்டு நடக்கும்
பெண்களே அதிகம் !........

இப்படிக்கு
 மொபைல்:)

எங்கோ  படித்த இந்த கவிதைக்கு காரணம் இருக்கிறது . முன்பு பருவம் வந்த பெண்கள் வீட்டை விட்டு வெளியே அனுப்பமாட்டர்கள் இன்றும் கூட சில வீடுகளில்அந்த நிலை தொடர்கிறது. தன்னுடன் படித்த தோழிகளுடன் எந்த தொடர்பையும் அவர்களால் தொடரமுடியாத நிலை இருந்தது ஆனால் இன்று நிலை அப்படி இல்லை. இன்று மொபைல் என்ற ஒரு சாதனம் பெண்களின் வாழ்கையில் எந்தளவுக்கு சுதந்திரதை அளித்துள்ளது என்பதை நாம் பார்க்கிறோம். இன்று பெற்றோர்களே பெண் பிள்ளைகளை தனியாக அனுப்புகின்றனர் இதற்கு நல்ல புரிதல் மற்றும் வளர்ச்சி என்று சொன்னாலும் கூட பயம் இல்லாமல் இருபதற்கு காரணம் மொபைல். ஒரு பெண் தனியாக போனால் எவளோ ஆண்களின் கண்கள் அவரை தவறாக பார்க்கிறது என்பது பெண்ணுக்கு தான் தெரியும். பஸ் நிறுத்தத்தில் தனியாக ஒரு பெண் நிற்கும் பொது எத்தனை ஆண்மகன்கள் அவளை தவறாக பார்கின்றனர் என்பது அவர்களுக்கு தான் தெரியும்.ஆண்களின் பார்வையில் இருந்து தப்பிக்க அவளுக்கு மொபைல் தான் துணை. தனியாக செல்லும் போதும் பயம் தெரியாமல் இருக்கு அதனோடு பேசிக்கொண்டு செல்வது. இப்படி பல நன்மைகள் இருக்கிறது பெண்களுக்கு ...

 

No comments:

Post a Comment