ஸ்டேட் வங்கி தனது
வங்கிக்கு பணியாளர்களை தேர்வு செய்ய இரண்டு கட்டங்களாக எழுத்து தேர்வைவை கடந்த இரு
வாரங்களாக ஞாயிற்றுகிழமை நடத்தியது.முதல் வாரம் நான் கோவையில் தேர்வை எழுதினேன்
என்றாலும் கடந்த வாரம் என் நண்பன் தேர்வு எழுதியதால் அவருக்கு துணையாக கோவை சென்று
இருந்தேன். நண்பர் உள்ளே சென்றுவிட்டார். நான் அவருக்காக தேர்வு முடியும் வரை
வெளியில் அமர்ந்து புத்தகம் படித்து கொண்டு இருந்தேன். அப்போது தான் அங்கு
நடப்பதை கண்டேன். ஸ்டேட் வங்கி தேர்வு நுழைவு சீட்டில் தேர்வு எழுத வருபவர்களுக்கு
சில விதிமுறைகளை ஆங்கிலத்தில் மிகவும் சிறிதாக கொடுத்துள்ளது. அதன்படி தேர்வு எழுத
வருபவர்கள் சமிபத்தில் எடுத்த போட்டோ ஒன்றை தேர்வு நுழைவு சீட்டில் ஒட்டி கொண்டு
வரவேண்டும், புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை ( வாக்காளர் அடையாள அட்டை, பான்
கார்டு ,ஓட்டுனர் உரிமம், புகைப்படம் ஒட்டிய வங்கி பாஸ் புக் ஏதேனும் ஒன்றை )
ஒரிசினல் மற்றும் ஒரு நகலை கொண்டு வரவேண்டும் என்று கூறி இருந்தது. ஆனால் அந்த
விதிமுறைகளை படித்தவர்கள் புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டையை கொண்டு வந்து
இருந்தனர் பெரும்பாலனோர் அதை படிக்கவில்லை என்ற காரணத்தால் கொண்டு வரவில்லை.
அவர்கள் எவளவோ கெஞ்சியும் வங்கி அதிகாரிகள் தேர்வு எழுத அனுமதிக்காமல் திருப்பி
அனுப்பிவிட்டனர். பாவம் அதிகம் பாதிக்கப்பட்டது என்னவோ வெளிஊரில் இருந்து வந்த
கிராமபுற மாணவர்கள் தான் என்றாலும் நகரத்தில் உள்ள நல்லா படித்த மாணவர்கள் கூட இதை
கொண்டு வரவில்லை. ஆகவே நண்பர்களே தேர்வுக்கு படித்தால் மட்டும் போதாது நாம் எழுத
போகும் தேர்வுக்கு உள்ள விதிமுறைகளையும் படித்துவிட்டு செல்லவேண்டும். இதை
பெற்றோர்களும் கவனிக்கவும்.
No comments:
Post a Comment